மீண்டும் படம் இயக்கப்போகும் ஆதி…

#IsaiymaipaalarAadhi #Hiphopaadhi

இசைமைப்பாளர் ஆதி மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன.  

சமீபத்தில் நான் ஒரு ஏலியன் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி வந்தனர்.

இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியே புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கி உள்ளன.

படத்தின் பெயர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

மக்கள் கோரிக்கை பற்றி ராமதாஸ் கருத்து….

Read Next

இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா…