மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா பட நடிகை…

#Shanusha  

தமிழில் ரேணிகுண்டா என்ற படம் மூலம் பிரபலமான இளம் நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருக்கிறார்.

முதல் முதலாக தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா, ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியானார்.

தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

கொரானா ஊரடங்கு காலத்தில் ஏற்படட்ட மன அழுத்தம் காரணாமாக தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாகவும், பின்பு குடும்பத்தினரை நினைத்து பார்த்த பின்பு அந்த எண்ணத்தைப் போக்க மருத்துவரிடம் சென்றதாகவும்,  அதனால் என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன் என ரேணிகுண்டா நடிகை கூறியுள்ளார்.

 

Read Previous

பாகுபலி நடிகரின் பிறந்தநாளுக்கு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்….

Read Next

பிக்பாஸ் 4-ல் வைல்ட் கார்டு என்ட்ரி இவர்தான்…!