பாகுபலி நடிகரின் பிறந்தநாளுக்கு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்….

#Prabhas #RadheShyam

பாகுபலி என்ற பிரமாண்ட படம் மூலம் உலக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரபாஸ். இவர் வரும் அக்டோபர் 23 அன்று தனது பிறந்தநாளை கொண்டாட தயாராகிறார்.

அந்த தருணத்தில், ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்கள் அக்டோபர் 23 அன்று #BeatsOfRadheShyam என்ற ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஸ்பெஷல் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

Read Previous

ஆச்சர்யத்தில் தங்க விலை….!

Read Next

மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற ரேணிகுண்டா பட நடிகை…