காதல் திருமணம் செய்யப்போகும் அதர்வா

#Adharva

தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் நடிகர் தான் அதர்வா.  இவர் காதல் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமான ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் அதர்வா கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. 

 

Read Previous

திரிஷாவுக்கு திருமணம் மாப்பிள்ளை இவர்தானாமே…!

Read Next

‘தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது வேதனை அளிக்கிறது’