சட்டசபையில் கங்கனா ரணாவத்- வைரல் போட்டோ…

#Kanganaranawat #Bollywoodheroine

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. 

ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமிநடிக்கிறார்.

மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், சட்டசபையில் இருக்கும் புகைப்படம்  தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

Read Previous

முதன் முறையாக வென்றார் இகாஸ்வியாடெக்…

Read Next

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகையுடன் லூடோ விளையாடும் மோகன்லால்…